எங்களை பற்றி
இந்த வலைப்பக்கத்தில் பயன்படுத்தியதற்கு
நன்றி,
இங்கே வரும் ஒவ்வொரு
பயனாளிகளும் திருப்திகரமாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு
பிரயத்தனங்களை செய்து வருகிறோம். ஏற்கனவே இதுபோன்ற வலைதளங்களை பயன்படுத்துவது
எங்களுக்கு புதிதான ஒன்றல்ல ஏற்கனவே மிகவும் பிரபலமான இரண்டு இணையதளங்களில் ஐந்து
ஆண்டுகளாக பணிபுரிந்த அனுபவம் உள்ளது. இதனால் வலைதள பக்கங்களுக்கு வரும்
பயனாளிகளின் தேவைகள் என்ன என்பதை புரிந்து அதற்குண்டான பதிவுகளை பதிவிடுகிறோம்.
அன்றாட நிகழ்வுகளில் அரசு சம்மந்தப்பட்ட ஆவணங்களும்
அதற்குண்டான சான்றிதழ்களும் பெற படிக்காத பாமர மக்களே அதிக அளவில்
சிரமப்படுகின்றனர் அவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு புரியும்
வகையில் எளிமையான தமிழ் நடையில் அரசாங்கத்தின் அறிவிப்புகள், சேவைகள் ஆகியவற்றை எப்படி
பெறுவது என்பது பற்றி இந்த வலைப்பக்கத்தில் பதிவிடுகிறோம். அதுமட்டுமின்றி சிறு
மற்றும் குறு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்கு
தேவையான இயந்திரங்களை எப்படி வடிவமைப்பது என்றும் பதிவு செய்து வருகிறோம்.
இங்கே
பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவுகளும் அதற்குண்டான தகுந்த தொழில்ரீதியான அனுபவம்
உள்ளவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்று அதன் பிறகே அதை பதிவு செய்யப்படுகிறது. இங்கே
பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவுகளும் யார் மனதையும் புண்படுத்தாத வகையில் தேடிவரும்
பயனாளிகளுக்கு உதவி செய்யும் வகையிலேயே பதிவிடப்படுகிறது. ஒரு பதிவு எழுதுவதற்கு
முன்பாக அந்த பதிவின் உண்மை தன்மையை நாங்களே கள ஆய்வு செய்து அதன் பிறகே
பதிவிடுகிறோம். இங்கே நாங்கள் ஒரு குழுவாக செயல்படுகிறோம். ஒரு பதிவை பதிவு
செய்வதற்கு முன்பாக அந்த பதிவை பற்றிய விவரங்களை சேகரித்து அதில் உள்ள உண்மைத்
தன்மைகளை நாங்கள் விவாதித்த பின்னரே அதை பதிவிடுகிறோம்.
அரசாங்க சேவை
பற்றிய பதிவுகளில் அவர்களின் இணையதளங்களில் நிகழ்கால தன்மையையே பதிவு செய்கின்றோம்
ஒரு வேளை அது எதிர்காலத்தில் அந்த இணையதளத்தில் பெயரோ அல்லது சேவையையோ
மாற்றப்பட்டிருக்கலாம். இதை பயனாளிகள் நடப்பு நிலையை கவனத்தில் கொண்டு கையாள
வேண்டும். எங்கள் குழுவில் கல்லூரியில் படித்தவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என பல்வேறு பட்டவர்களும்
கலந்திருப்பதால் மிக சரியான முறையில் இதை எங்களால் செய்ய முடியும் என நம்புகிறோம்.
இதில் தொடர்ந்து தமிழ் சார்ந்த பதிவுகளை அதிக அளவில் பதிவிடப்படுகிறது.
எதிர்காலத்தில் மிகச்சிறந்த மற்ற தலைப்புகளிலும் பதிவுகளை இடலாம் என ஆய்வு செய்து
வருகிறோம். இது மற்ற இணையதளங்களில் மாதிரியாகவும் அல்லது அவர்களின் பதிவுகளில்
கொண்டதாகவும் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக பயனாளிகள் மனதில் மறக்கமுடியாத இணையதளமாக
இருக்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். அதற்காக கடின உழைப்பும் செய்து
வருகிறோம்.
எங்கள் வலைப்பக்கத்திற்கு வரும் பயனாளர்கள் நேரடியாக
எங்களை தொடர்பு கொண்டு எங்கள் பதிவுகளை பற்றியும் இதில் செய்யப்படுகின்ற மாற்றத்தை
பற்றியும் எதிர்காலத்தில் எந்த மாதிரியான பதிவுகளை பதிவிடலாம் என்ற ஆலோசனைகளை
வழங்கலாம். அதற்கேற்றார்போல நாங்களும் எங்களை மாற்றிக் கொள்கிறோம். நன்றி, வணக்கம்.
No comments:
Post a Comment