Monday, July 9, 2018

டிஜிட்டல் கேமராவில் உள்ள பயனுள்ள சில வழிகாட்டல்கள்

டிஜிட்டல்  கேமராவில் உள்ள பயனுள்ள சில வழிகாட்டல்கள்


பிலிம்  போட்டு படமெடுத்தது  மறைந்து போய் இப்போது எங்கும் டிஜிட்டல் கேமராக்கள்தான்  பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேமராக்களின் விலையும் அனைவரும் வாங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதனை யாரும் எளிதில் இயக்க முடியும் என்பதாலும் கேமராவிற்கும்  பாதிப்பு எதுவும் வராது என்பதாலும் சிறுவர்கள் கூட இதனை இயக்குவதை பார்க்கலாம்.டிஜிட்டல் கேமராக்கள் குறித்த சில அடிப்படை தகவல்களை இதில் காணலாம்.          


compact camera

காம்பேக்ட் கேமரா


  1.டிஜிட்டல் கேமராக்கள் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்  SLR camera - Single Lens Reflex, Bridge Camera, Compact என மூன்று வகைப்படும்.இந்த மூன்றும் மூன்று வகை பயனாளர்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. SLR  கேமராக்கள் பொதுவாக புகைப்படத் தொழில் உள்ளவர்களாலும் சிறந்த போட்டோக்கள் எடுக்க வேண்டும் என விரும்புவர்களும் பயன்படுத்தலாம்.Bridge கேமராக்கள் அதனுடைய பெயருக்கு ஏற்ற முதல் மற்றும் மூன்றாவது வகைக்கு இடையே உள்ள நிலைகளில் இயங்குகின்றன மிகவும் விலை உயர்ந்த கேமராக்களை தவிர்க்க விரும்பும் போட்டோகிராபர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். Compact கேமராக்கள் எடுத்துச்சென்று இயக்குவதற்கும் எளிமையானவை மூன்று வகைகளில் மிகவும் விலை குறைந்தது  இவற்றில் ஏதாவது ஒன்று உங்கள் திறமைக்கும் விருப்பத்திற்கும் பணத்திற்கும் ஏற்ற வகையில் ஒன்றை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம் ஏன் இதனை நீங்கள் பெற்று பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் இங்கு பார்க்கலாம்.


2. இதன் விலையும் நாம்  வாங்கும் வகையிலேயே இருக்கும் மற்றும் கேமராக்களை நாம் எடுத்துச் செல்கையில் எங்காவது வைக்க வேண்டியிருக்கும் அப்போது அதை திருடப்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. இந்த வகை கேமராக்களில் பாதுகாப்பு வசதி அதிகமாக இருப் பதாலும் உடலோடு ஒட்டிய பெல்டோடு இணைக்க பட்டுள்ளதால் நாமே மறந்தாலும் துலைந்து போகவே திருடவோ வைப்பு மிக குறைவு.


3. நீங்கள் எடுக்கும் போட்டோக்கள் 10 அங்குல அளவிற்கு மீகாமல் இருக்கும் பட்சத்தில் Compact  கேமராக்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் பெரும் சிறப்பைத் தருகிறது. நாம் தினசரி பயன்பாடுகளுக்கு சிறிய அங்குல அளவுகளை கொண்ட புகைப்படங்களை அதிக அளவில் எடுத்து பயன்படுத்துகிறோம் இந்த வகை கேமராக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.


4. ஏறத்தாழ அனைத்து Compact கேமராக்களும் zoom செய்யும் வசதியை தருகின்றன. இந்த  லென்ஸில் ரேஞ்ச் என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும் நல்ல ஜூம் லென்ஸ் 28 மில்லி மீட்டர் என்ற அளவில் தொடங்கி அல்லது இன்னும் அதிகமாக இருக்கலாம் இது ஜனசந்தடி  உள்ள நெருக்கமான இடங்களையும் உங்கள் போட்டோக்களை எளிமையாக எடுக்க முடியும் .இதன்மூலம் அகலமான ஒரு வியூவ் உங்களுக்கு கிடைக்கும். ஒரு ஜூம் லென்ஸின் அதிகபட்ச விரிவு 200 மில்லி மீட்டர் கூட இருந்தால் நல்லது. தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை அல்லது நபரை நன்றாக அருகில் உள்ளது போல் போட்டோ  எடுக்க இதனை பயன்படுத்தலாம்


5.லென்ஸின்  வேகம் அடுத்து முக்கியமான விஷயம்  Compact கேமராவை பொதுவாக லென்ஸ் அப்சர்  f/2.8 இருந்தால் அதை வேகமாக கருதப்படுகிறது ஒரு வேகமான இயக்கம் லென்ஸ் மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட போட்டோக்களை எடுத்து விடுவதாக உள்ளது. மேலும் கேமரா உள்ளாக வேண்டும் பிளாஸ் வெளிச்சத்தினை நம்ப வேண்டியதில்லை Compact கேமராக்கள் f/5.6  வரை அப்சர் தருகிறது f/4 வது அப்சர் தரும் கேமராக்களை வாங்குவது நல்லது.

6.நீங்கள் எடுக்கும் போட்டோக்கள் உங்கள் விருப்பத்திற்கு  ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்றால் அதற்கு அப்சர் பிரையாரிட்டி / ஷட்டர் பிரையாரிட்டி உள்ள compact  கேமராக்கள் வாங்குவது கூடுதல் பயனைத் தரும் மேலும் ஆட்டோமெடிக் வகையுடன் மெனுவலாக இயங்கும் தன்மை கொண்ட கேமராக்களை வாங்குவது இன்னும் சிறப்பு.

7. கேமராவினை இறுக்கிப் பிடித்து போட்டோ எடுப்பது நல்லது இல்லையே படங்கள் உடலில் அசைவு காரணமாக தெளிவில்லாமல் இருக்கும் பல compact  கேமராக்களின் இந்த இவ்வகையில் உதவிடும் விஷயங்களை தருகின்றனர் இந்த வசதி இமேஜ் stabilization என அழைக்கப்படுகிறது இந்த வசதி உள்ள compact கேமரா தானாகவே ஐ.எஸ்.ஓ சென் சிடிவிடியை  அதிக படுத்துகிறது இதன் மூலம் அப்சர் வேகம் ஷட்டர் வேகம் அதிகரிக்கிறது இதனால் எடுக்கப்படும் பொருள் தெளிவான முறையில் பதிவிடப்படுகிறது.

8. கேமரா வாங்குகையில் அதில் மெமரி கார்டை பயன்படுத்த முடியுமா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மெமரி கார்டை பயன்படுத்த முடியாத கேமிராவை வாங்குவதைத் தவிர்க்கலாம் அல்லது மிகப் பெரிய அளவில் கேமராவைவின்  மெமரி இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை.

9. குறைந்த அளவில் ஐ.எஸ்.ஓ சென் சிடிவிடியை  இருக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் இதன்மூலம் தெளிவான போட்டோக்களை உடனுக்குடன் எடுத்து  அதை தெளிவாக நம்மால் பார்க்க முடியும்.

10. அனைத்து   compact கேமராக்களும் ஒரு பொருளின் அருகே சென்று க்ளோசப் படங்களை எடுக்கும் வசதி கொண்டுள்ளது. இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட படங்களை எடுக்க வில்லை என்றால் உடனே எடுத்துப் பாருங்கள் இந்த பழக்கம் உங்கள் போட்டோ எடுக்கும் அனுபவத்தையும் உலகையும் புதிய கோணத்தில் பார்க்க உதவியாக இருக்கும்.

11. ஒவ்வொரு படம் எடுத்த கொண்டிருக்கையில் உங்கள் கேமராவில் பேட்டரியின் சக்தி எந்த அளவில் இருக்கிறது என்பதை பார்ப்பதை தவிர்க்கவும் இதனால் பேட்டரி பவர்  பாதுகாக்கப்படுகிறதா. அவ்வப்போது தேவைப்படும் சமயங்களில் மாற்று பேட்டரியை பயன்படுத்துங்கள். இது எதிர்பாராத நேரங்களில் படம் எடுக்கும் போது ஏற்படும் மின்சக்தியை  பராமரிக்க உதவியாக இருக்கும். மேலும் தொடர்ந்து பயன்படுத்த கூடிய மின் சக்தி குறையாத ரீசார்ஜபில் பேட்டரி பயன்படுத்துவது நல்லது இது உங்கள் தேவை செலவுகளையும் கேமிராவின் ஆயுளையும் பாதுகாக்க உதவும்.

12. கேமராக்களில் பென்சில் பேட்டரிகளை பயன்படுத்துபவர்கள் காம்பேக்ட் கேமராக்களை காட்டிலும் லித்தியம் அயன்  ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியில் இயங்கும் கேமராக்களை வாங்குவது சிறந்தது.


No comments:

Post a Comment