எந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் ஆனாலும் அவர்களுக்கு வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யப்படுகிறது. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை சரியாக உங்களது வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கபடுகிறதா என்பதை ஒவ்வொரு தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும். இதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும்
ஓப்பன் ஆகும் இணையதளம்தான் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் அதிகார பூர்வமான இணையதளமாகும். இதில் இடது பக்கம் மேல்புறத்தில் உள்ள OUR SERVICES என்ற பட்டனை கிளிக் செய்யவும். ஒப்பன் ஆகும் FILE- களில் FOR EMPLOYEE என்பதை கிளிக் செய்யவும்.
ஒப்பன் ஆகும் FILE- களில் கீழ் புறத்தில் உள்ள MEMBER PASSBOOK என்பதை கிளிக் செய்யவும். இது ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கே உங்களது வைப்பு நிதி கணகிற்கான UAN NO உள்ளிடவும். அதன் பிறகு உங்களது கடவு சொல்லை பதிவு செய்யவும். அதனோடு கீழே வழங்கப்பட்ட கேப்ச எண்களை டைப் செய்யவும்.
இப்போது உங்களது கணக்கிற்குள் சென்றுவிடும் அங்கே இடது புறத்தில் select member id to view paasbook என்பதற்கு கீழே உள்ள கருப்பு நிற பட்டனை அழுத்தவும்.
வலது புறத்தில் உங்களது முழு விபரங்களும் வந்துவிடும். உங்களது பெயர்,முகவரி,ஆதார் எண், இதுவரை உங்கள் கணக்கில் வரவு வைக்க பட்ட தொகை என அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.இதில் எதாவது திருத்தும் செய்யவேண்டும் என விரும்பினாலும் மாற்றி கொள்ளலாம்.இந்த முறைடில் மிக எளிதாக உங்களது வருங்கால வைப்புநிதியின் இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்.தேவைபட்டால் இதை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment