தமிழக அரசு புதிதாக வழங்கியுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை எப்படி சேர்க்க வேண்டுமென இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக எங்கும் செல்ல வேண்டாம் உங்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம். ஒரு சில ஆவணங்களை அருகே இருக்கக்கூடிய ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது.
இதில் குழந்தைகளின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றால் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றான் அவர்களின் பிறப்புச் சான்றிதழை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்டவர் என்றால் அவர்களின் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பெயரை சேர்க்க ஆதார் கார்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் அவசியமாக தேவைப்படுகிறது. திருமணம் முடித்தவர்கள் என்றால் அவர்களுடைய பழைய ரேஷன் கார்டில் அவருடைய பெயர் நீக்கப்பட்டு 15 நாட்கள் கழித்து புதிய ரேஷன் கார்டில் அவர்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பெயர்களை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இது தமிழ் நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்லும் அங்கே சென்றவுடன் வலதுபக்கம் மேல்ப்புறத்தில் உள்ள பயனாளிகள் நுழைவு என்ற இடத்தில் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யவும். நீங்கள் பதிவு செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு கடவு பின் நம்பர் வரும் அதை பதிவு செய்தவுடன் உங்களது கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். அங்கேயே உங்களது பெயர், உங்களது ஆதார் எண், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப நபர்களின் எண்ணிக்கை அனைத்தும் காட்டப்படும். அதில் இடது புறத்தில் ஸ்மார்ட் கார்டு விபரம் மாற்றம் என்ற இடத்தில் கிளிக் செய்யவும். அடுத்ததாக ஓப்பனாகும் பகுதியில் மூன்றாவது காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரம் என்று இருக்கும் அதற்கு வலதுபுறத்தில் உறுப்பினர்களை சேர்க்க என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
உறுப்பினர்கள் விபரம் சேர்த்தல் என்ற பட்டியலில் நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், வயது, பாலினம், அவர்களது உறவு முறை ஆகியவற்றை பதிவு செய்த பின்னர் ஆதார் கார்டு நம்பர் என்ற இடத்தில் பெரியவர்களாக இருந்தால் அவர்களது ஆதார் கார்டு நம்பரை பதிவு செய்ய வேண்டும். குழந்தைகளாக இருந்தால் அந்த இடத்தில் எதையும் நிரப்ப வேண்டாம். கீழ்ப்புறத்தில் உள்ள மற்ற ஆவணங்கள் என்ற பகுதியில் பெரியவர்களாக இருந்தால் அவர்களது ஆதார் கார்டு என தேர்வுசெய்யவும் சிறியவர்களாக இருந்தால் பிறப்புச் சான்றிதழ்களை தேர்வுசெய்யவும் அதன் பிறகு அதன் அருகே உள்ள ஜூஸ் என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்த ஆவணத்தை பதிவேற்றவும். அதன் பிறகு பதிவு செய்ய என்ற பட்டனை கிளிக் செய்யவும். அந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நீங்கள் யாருடைய பெயரை சேர்த்திரோ அந்த பெயர் உங்கள் குடும்ப பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அதன் பிறகு இறுதியாக ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்களது காரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் பதிவு செய்த ஆதார் கார்டு நம்பர் மற்றும் ஸ்கேன் செய்து பதிவேற்றப்பட்ட நம்பரூம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். என்பதை மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment