Saturday, August 11, 2018

ஆதார் எண்ணை பாதுகாப்பாக லாக் செய்வது எப்படி

தற்போது தொழில் ரீதியாக வங்கி மற்றும் அரசு செயல்பாடுகளுக்கும் ஆதார் எண் மிகவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நமது நாட்டின் ஆதார் பயன்பாடு மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தனிநபர் அடையாள எண் ஆகும். தனிநபர்,முகவரி மற்றும் இருப்பிடம் இதனை தெரிந்துகொள்ள அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது. நம்முடைய அனைத்து  தகவல்களும் இந்த ஒரே கார்டில் இருப்பதால் இதை எளிமையாக நமது தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க முடியும் நாம் சாதாரணமாக ஒரு இடத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தி விட்டு அதை அலட்சியப்படுத்தி விட்டு மறந்து சென்றுவிடுவோம்.

உதாரணமாக ஒரு செல்போன் சிம் வாங்க சென்றாலும் கூட அங்கே ஆதார் எண் அவசியமாக தேவைப்படுகிறது. நாம் சிம் வாங்கி விட்டு திரும்ப வந்து  விடுவோம் அதன் பிறகு நமது ஆதார் எண்ணை பயன்படுத்தி நமது தகவல்கள் திருடப்படலாம். இதை தடுக்கவே ஆதார் கார்டின் அதிகாரப்பூர்வமான இணையதளம் ஒரு சேவையை வழங்கி வருகிறது. நாம் இல்லாமல் நமது தகவலை வேறு யாரும் பார்க்காத வண்ணம் அவற்றை லாக் செய்து வைக்க முடியும். நிறைய பேருக்கு இந்த சேவை தெரியாத காரணத்தால் அவர்களின் மூலம் ஒரு சில வங்கிகளில் உள்ள அவருடைய பரிமாற்றங்களும் கூட கண்காணிக்கப்படுகிறது. இதனால் மிக எளிதாக நம் தகவல்கள்    திருட படுவதோடு அவற்றை வைத்து மிரட்டி பண வசூலில் ஈடுபடுகின்றனர். இது சம்மந்தமாக தினசரி காவல் நிலையங்களில் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது எனவே நம்முடைய ஆதார் கார்டை நாம் லாக் செய்து கொள்வதன் மூலம் இதுபோன்ற இன்னல்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இது மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதி இதை நாம் மொபைல் போனில் இருந்து இயக்கி கொள்ளலாம். ஆதார் கார்டைலாக் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இது ஆதார் கார்டின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு தங்களை கூட்டி செல்லும். அங்கு  சென்றவுடன் ஆதார் கார்டு சர்வீஸ் என்ற  லேபிள் கொடுத்திருப்பார்கள். அதற்கு கீழே  மூன்றாவது காலத்தில் லாக் அன்லாக்  பயோமெட்ரிக் என்ற  பட்டன் இருக்கும் அதை  கிளிக் செய்தவுடன் வேறொரு பக்கம் ஓபன் ஆகும். அங்கு தங்களது ஆதார் எண், அருகே உள்ள  கேப்ட்சா  பின்  நம்பரையும் என்டர் செய்யவும்.  ஆதார் எண்ணை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தற்காலிக கடவுச்சொல் அனுப்பப்படும் அவற்றை வலது பக்கத்தில்  என்டர் செய்யவும்.  என்டர்   செய்தவுடன் மேலும் ஒரு பக்கம்   ஓபன் ஆகும்.   கீழ்ப்புறத்தில் பச்சை நிறத்தில் ஒரு   பட்டன்  இருக்கும் அதற்கு

மேல் புறத்தில் செக்யூரிட்டி கோடு இருக்கும் அருகே உள்ள  கேப்ட்சா பின் நம்பரையும் என்டர் செய்யவும். என்டர் செய்யவுடன் கீழே இருக்கக்கூடிய பச்சை நிற பட்டனை கிளிக்  செய்தால் உங்களது ஆதார்கார்டு லாக் செய்யப்பட்டுவிடும் அதன் பிறகு உங்களுக்கு தேவைப்படும்   சமயங்களில் மட்டும்  அன்லாக்  செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


நீங்கள் பயன்படுத்திய உடன் மீண்டும் லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள்  தகவலை தவறான வழியில் பயன்படுத்த முடியாது மேலும் உங்களது  கைரேகை வேலை செய்யாது இதனால் நீங்கள் இல்லாத சமயங்களில் உங்களது  கார்டை   பயன்படுத்தி  உங்களது பொருள்களையும் விபரங்களையும்  திருட முடியாது. இந்த பாதுகாப்பான வசதியை அரசு வழங்கி உள்ளது இதை பயன்படுத்தி உங்களது தகவல் திடுடாத வண்ணம் பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment