Monday, August 13, 2018

மின் கட்டணத்தை எளிதான முறையில் கமிஷன் இல்லாமல் செலுத்துவது எப்படி

தமிழ்நாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து பயனாளர்களும் 2  மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வேண்டும். மின் கட்டணம் செலுத்த மின்சார  அலுவலகத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து மின் கட்டணம் செலுத்துவதை விட வீட்டிலிருந்தபடியே  மொபைல் மூலமாக 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் எளிதான முறையில் கமிஷன் இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தலாம்.மிகவும் பிரபலமான அமேசான் இணையதளம் பல சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி இணைய தளத்தை விட  மிக சுலபமாக அனைத்து தர மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுக்கு அமேசான் தளத்தின் app பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அமேசான் app இல்லாதவர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டால் செய்த பிறகு மேலே இருக்கக்கூடிய புதிய ஐகானில் கிளிக் செய்யவும் கீழே வரும் மெனுக்களில்  amazon pay என்ற பட்டனை செலக்ட் செய்யவும். இதை கிளிக் செய்தவுடன் வேறொரு பகுதிக்கு செல்லும் அங்கே மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், இ பி என பலவகையான ஆப்ஷன் இருக்கும் அங்கே இ பி பில் என்பதை செலக்ட் செய்து கொள்ளவும். அதன் பிறகு நமது மாநிலத்தில் தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு கன்ஸ்யூமர் நம்பர் பாக்ஸில் உங்களது கன்ஸ்யூமர் நம்பரை பதிவு செய்யவும் இது நமது மின்சார அட்டையின்  முன்பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இது அனைத்தையும் சரியாக டைப் செய்து பிட்ச் பில் அந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நீங்கள் பதிவு செய்த கன்ஸ்யூமர் நம்பருக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை என்ன அதை எப்பொழுது கட்ட வேண்டும் என்பது போன்ற தகவல்கள் வரும் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் கட்ட தவறியதால் அதற்குண்டான அபராத தொகையை சேர்த்து அதில் காட்டப்படும். வீட்டில் இல்லாத நேரத்தில் மின்சார அலுவலகத்தில் இருந்து கணக்கெடுக்க வந்திருந்தார்கள் என்றால்  உங்கள் அட்டையில் எவ்வளவு தொகை என்பதை பதிவு செய்து இருக்க மாட்டார்கள் இந்ததளத்திற்கு சென்று உங்களது இந்த மாத தொகை என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு நீங்கள் தொகையை செலுத்த விரும்பினான் continue to pay என்ற பட்டனை கிளிக் செய்யவும்.




அந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நேரடியாக பணம் செலுத்தக்கூடிய தளத்திற்கு சென்று விடும் நாம் ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், செய்வது போலவே eb bill தொகையையும் செலுத்த வேண்டும். வங்கியின் மூலமாக நேரடியாக மின்சார கட்டணத்தை செலுத்தலாம் அதற்கு வங்கியின்  ஏடிஎம் கார்டு சம்மதமான தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் எந்த கார்டில் பணம் செலுத்த விரும்புவீர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என்பதை அப்ளை செய்து கொள்ளவும். அதன்பிறகு எந்த வகை கார்டு என்பதை தேர்வு செய்து (ஏடிஎம் கார்டு நம்பரை) உங்களது ஏடிஎம் கார்டு முன்னாள் அச்சிடப்பட்டிருக்கும் என்னையும் டைப் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனுடைய பின்பக்கத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் சி சி வி நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். கார்டின் உடைய எக்ஸ்பயரி தேதி என்ன என்பதையும் பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு add your card என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு otp பின் நம்பர்  வரும் அந்த எண்ணை பார்த்து இங்கே டைப் செய்ய வேண்டும் சரியான முறையில் டைப் செய்த பிறகு Ok என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். நீங்கள் செலுத்தப்பட்ட தொகைக்கான சாட்சியை இந்த மொபைல் போனில் பதிவு செய்து கொள்ளலாம் இல்லை உங்களுக்கு பில் வேண்டுமென்றாலும் பில்லை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கமிஷன் தொகையை பெறுவது கிடையாது. இதை வெளியே சென்று நாம் செய்தாலும் கூட அதற்கான கமிஷன் தொகையை அளிக்க வேண்டி வரும் ஆனால் வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் நமது விருப்பம் போல மின் கட்டண   தொகையை செலுத்தி கொள்ளலாம். ஒருவேளை தவறான முறையில் என்டர் செய்து பணம் செலுத்தப்பட்டிருந்தால் அந்த பணத்தை மீட்டெடுத்து கொள்ளலாம். மின் கட்டண தொகை செலுத்த மட்டுமில்லாமல் பல்வேறு சேவைகளை அமேசான் நிறுவனம் வழங்கி வருவதால் மற்ற சேவைகளையும் நாம் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஒரு முறை வங்கியின் விபரங்களை தெரிவித்து பதிவு செய்து வைத்துக் கொண்டால் போதுமானது அதைத் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் வங்கியின் விபரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் நம்முடைய பொன்னான நேரமும் மற்றவர்கள் அளிக்கக்கூடிய கமிஷன் தொகையும் நமக்கு பெருமளவில் மிச்சமாகும். இதுபோன்ற அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை பெற தொடர்ந்து இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment