நிறைய மக்களுக்கு இந்த கேன் (CAN) நம்பர் என்றால் என்ன என்பதே தெரியாமல் உள்ளார்கள். மத்திய மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதருக்கும் கேன் (CAN) நம்பர் என்பது மிகவும் அவசியமானது ஒவ்வொரு தனிமனிதனும் கேன் நம்பரை பதிவு செய்தால் மட்டுமே மத்திய மாநில அரசின் சலுகைகளை மற்றும் சேவைகளை பெற முடியும். இதை ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது அதையே வாழ்நாள் முழுதும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது மிக எளிமையான வேலைதான் ஒரு சில நிமிடங்களில் இந்த கேன் நம்பரை பெற்றுவிடலாம். https://tnega.tn.gov.in/(CAN) நம்பரை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இதை கிளிக் செய்தவுடன் வலது புறத்தில் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய சிட்டிசன் login என்ற பட்டனை கிளிக் செய்யவும். இது வேறொரு பேஜ் ஓப்பன் ஆகும் அதில் சைனிங் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களது யூசர் நேம் பாஸ்வேர்ட் மற்றும் கேப்சா நம்பரை பதிவு செய்து கொள்ளலாம். முதன்முறையாக இந்த தளத்திற்கு வருகை தருபவர்கள் sigup செய்து உங்களுக்கு ஒரு என ஒரு பிரத்யேகமான அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
லாகின் செய்த பிறகு சர்வீஸ் என்ற பட்டனை கீழ் புறத்தில் உள்ள சர்வீஸ் வைஸ் என்ற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அரசு வழங்கக்கூடிய சர்வீஸில் அனைத்துமே ஓபன் ஆகும் அதில் ஏதாவது ஒரு ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள் இதையடுத்து அடுத்த பேஜ்க்கு செல்லும் அங்கே proceed என்ற பட்டனில் கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு வரக்கூடிய pages மேல்புறத்தில் ரெஜிஸ்டர் கேன் என்கின்ற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பட்டனில் கிளிக் செய்யுங்கள். கேன் ரெஜிஸ்டர் page க்கு செல்லும் அங்கு ஏற்கனவே உங்களது ஆதார் எண் பதியப்பட்டிருக்கும் அவற்றில் உங்களால் திருத்தம் செய்ய முடியாது. அந்த பகுதியில் ஒரு விண்ணப்பம் வழங்கப் பட்டிருக்கும் அந்த விண்ணப்பத்தில் உங்களை பற்றிய முழுமையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் பொறுமையாக பார்த்து படித்து உங்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து இந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். இதை 3 பகுதியாக பிரித்து வழங்கி இருப்பார்கள் ஒவ்வொரு பகுதியில் பார்த்து படித்து உண்மை நிலையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நீங்கள் பதிவு செய்யும் சேவைகளும் சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கபடும்.
எனவே இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு தகவல்களையும் பதிவு செய்யுங்கள். உங்கள் அனைத்து தகவல்களும் பதிவு செய்தவுடன் அவற்றை மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு செய்து பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்தவுடன் உங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு இ சேவை தளத்திலிருந்து ஒரு பாஸ்வேர்ட் நம்பர் அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்ட் நம்பரை பதிவு செய்த பிறகு புதிதாக ஒரு பேஜ் ஓபன் ஆகி அங்கு உங்களது கேன் நம்பர் display ஆகும். அந்த நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கீழே இருக்கக்கூடிய வங்கி விபரங்களை தெரிவிக்க வேண்டும் பிறகு ரெஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். வங்கி விவரங்கள் தருவது ஏதாவது கட்டணம் சேவைகளைப் பயன்படுத்தினால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து கொள்ளவும். உதவி தொகை போன்ற சலுகைகளை கோரினால் அந்த தொகையானது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. கேன் நம்பர் என்பது நம்முடைய தகவல்களை முழுமையாக பதிவு செய்து அந்த பதிவு செய்த எண்ணெய்தான் கேன் நம்பர் என்று கூறுகிறார்கள். இதன் மூலமாக நாம் எந்த சேவை மற்றும் சலுகைகளை பெற வேண்டும் என்றாலும் நமது முழு தகவல்களையும் அளிக்க தேவை கிடையாது. நம்முடைய கேன் நம்பரை மட்டும் அளித்தால் போதும் நம்முடைய முழு தகவல்களும் அந்த சேவை தளத்திற்குச் சென்று விடும். இது மிக எளிமையான வழி என்பதால்தான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கேன் நம்பர் என்ற ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதை சரியான முறையில் கையாள போது மிக எளிமையாக அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

No comments:
Post a Comment