Wednesday, August 29, 2018

மற்றவர்கள் மீது பழிபோட்டு பேச காரணம் என்ன

ஒவ்வொரு பிரச்சனைகளில்  இருந்து வெளியே வருவதற்கு அதற்கு  தொடர்புள்ள சில உணர்வுகளை நாம் அனுபவிக்க வேண்டும். பழிபோட்டு பேசக்கூடாது என நினைப்பவர்கள்  எப்போது நான் அந்த  துரோகத்திற்கு  ஆளானேன் எப்போதும் எனக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காமல் போனது   அதுபோல எப்போது நான் ஏமாற்றப்பட்டேன் என்று நினைக்காமல். அந்த நிலையை மீண்டும் மனநிலைக்கு கொண்டு வந்து அதை அனுபவிக்க வேண்டும்.

credit to https://www.luckylookonline.com


அது போன்ற நிலைக்கு செல்லும் போது ஒரு கோபம் வரலாம், அதிகப்படியான  பீதி வரலாம்கண்ட்ரோல் பண்ண முடியாத அழுகை வரலாம், உதாரணமாக ஒருவருக்கு அண்ணன் தம்பி சொத்து தகராறில் சொத்து கிடைக்க வில்லை என்றால் நாட்கள் செல்ல செல்ல கூட்டுக் குடும்பத்தை பற்றிய தவறாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அண்ணன் தம்பி என்றாலே மோசடி செய்துவிடுவார்கள் என்று பழி போட்டு பேச ஆரம்பித்து விடுவார். இது போன்ற நேரங்களில் அன்றைய நேரத்தில் வராத கோபம் மற்றும் உணர்வுகளை இந்த சமயங்களில்வெளிப்படுத்த வேண்டும். அந்த உணர்வுகள் அத்தனையும் ஒரு கடிதத்தில் எழுதி தீர்த்துவிடலாம் அல்லது வேறு ஒரு ஆலோசகரின் பார்த்து மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விடலாம். இன்று போல அன்று பேச வேண்டும் என நினைத்தேன் ஆனால் முடிய வில்லை  இன்று பேசுகிறேன்  இதனால்  துரோகம் செய்தவர் எந்த வகையிலும் பாதிக்க மாட்டார் ஆனால் நம் மனதில் இருக்கக்கூடிய உணர்வுகளை பழிபோடும் செயல்களையும் இதன் மூலம் அகற்ற முடியும் துரோகம் செய்தவர் திருந்த மாட்டாரு அவரது குணமே அப்படி தானா என்று  தவறை உணராத மனிதரை பற்றி சிந்தித்து உங்கள்  மனது பாதிக்கப்படுவது விடுத்து இது போன்ற செயல்களை உங்கள் மனதை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.

  நீங்கள் உங்கள் கற்பனையிலேயே அவர் தவறை உணர்ந்து விட்டார் என கற்பனை செய்து உங்கள் பிரச்சனையை விடுவித்துக் கொள்ளுங்கள். எதிர் தரப்பில் துரோகம் செய்தவருக்கும் ஒரு நியாயம் உள்ளது. அவருடைய நிலையிலிருந்து அந்த நியாயத்தை பாருங்கள் அதை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்து விடுங்கள். யார் மன்னிக்கவும் அவரை மிக  வலிமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் ஒரு மன ஆறுதல் கிடைக்கும் அதை விடுத்து நம்மை ஒருவர் ஏமாற்றிவிட்டார் துரோகம் செய்து விட்டார் எனக் கூறிக் கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர் மீது பழி போட்டு அவரை பழிவாங்க காத்திருப்போம். ஆனால் எதுவும் இல்லாத சூழலில் பிறகு நம்மை நாமே  வெறுக்க ஆரம்பித்து விடுவோம்.  நான் இப்படி போய் ஏமாந்து விட்டேனே நான் என்ன புத்திசாலி என்னை விட கேவலமான யாரும் கிடையாது என சுய மதிப்பை இழந்து விடுவீர்கள். நம்மை நாமே  வெறுத்து கொள்ளும் நிலைக்கு சென்று கொண்டே இருக்கும். நம்மிடமே கடுமையான கோபம், அதை சார்ந்த வந்த ஒரு தூக்கம், இப்படி ஏமாந்து விட்டோமே என்ற பீதி, அதன்பிறகு துன்பம், என்ற இந்த நான்கு உணர்வுகளும் உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று மிக இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்லும் இதுபோன்ற செயல்களை தவிர்க்க முன்பு கூறிய உளவியல் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகும்.

                           படிப்பே வராத மாணவனை பன்னிரண்டாம் வகுப்பு தோல்வியுற்ற மாணவனை 60 லட்சம் பணம் கொடுத்து மருத்துவ சீட்டை வழங்கியுள்ளனர். அந்த மாணவனை மருத்துவம் படிக்க வேண்டும் என குடும்பத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். அந்த மாணவன் மருத்துவத்தை படிக்க முடியவில்லை நிறைய பாடங்களில் தோல்வி அடைந்தார் இதை எதிர்கொள்ள முடியாமல் போதை மருந்து போன்ற பிரச்சனைகளுக்கு அடிமையாகிவிட்டான். இப்போது அந்த மாணவனின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியானது. இப்பொழுது அந்த மாணவனின்  நிலைக்கு யார்  காரணம்  என்பதை கூறுங்கள். ஆனாலும் பெற்றோர்கள் அந்த மாணவனையே குறை கூறுகின்றனர் ஆனால் உண்மையான பிரச்சனை பெற்றோரிடம் உள்ளது. இதை அவர்கள் உணராமல் மேலும் மேலும் தவறு செய்கின்றனர். இதே நிலைதான் பல இடங்களிலும் நடக்கிறது. அதை திருத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment