Wednesday, August 29, 2018

அபிப்ராயங்கள் எப்படி உருவாகிறது

நாம் பல நேரங்களில் எப்படி சரியாக  முடிவு எடுக்க  வேண்டும் அது போன்ற குழப்பமான நேரங்களில் நாம் எடுக்கின்ற முடிவுகள் எப்படி  இருக்கின்றன என்பதைப் பற்றி உதாரணத்துடன் பார்த்துக்  கொண்டிருந்தோம்.  இது எல்லாம் இயற்கையானது நாம் கவனித்ததில் மட்டும் சற்று கவனம் செலுத்தினாலே போதுமானது இயற்கையோடு இணைந்து வாழ  முனைந்தாலே  பல பிரச்சினைகளை இயல்பாகவே தீர்த்து விடலாம்.

credit to https://www.yarl.com


ஒரு குழாயில் கலங்கிய நீர் வந்தால் அதை உடனே சரி செய்து விட முடியாது சற்று நேரம் அமைதியாக வைத்தாலே தானாகவே தெளிந்துவிடும். அதே போல தான் நம்முடைய வாழ்க்கையில் சண்டைகள் சர்ச்சைகள் குழப்பங்கள் வரும் போது கலங்கிய நீர் பல குழப்பங்கள் வரும். அது போன்ற நேரங்களில் நம்முடைய உணர்வுகளை சரியாக புரிந்து நம் கோபப்படுகிறோமா  வருத்தப்படுகிறோமா பயப்படுகிறவன் வெறுப்பில் உள்ளான் என்பதை தனிமையில் அமர்ந்து அந்த உணர்வுகள்லோடு நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை மறக்கக்கூடாது அந்த உணர்வுகள் இருக்கும் போது நாம் பார்க்கக் கூடிய பார்வையே வேறுவிதமாகத்தான் இருக்கும். அது நமக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ மஞ்சள் நிற கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கும்போது அனைத்துமே மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். இது எல்லாம் மஞ்சள் தான் என்று நான் கூறினேன் அது என் அறியாமை நம் உணர்வுகள் மேல் ஓங்கி இருக்கக்கூடிய மன நிலைகளில் நம் உலகத்தை பார்க்கும் காட்சிகள் மற்றவர்களுக்கு தெரிவது போல நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் பல விஷயங்களை கண்டறிவதுதான் உண்மை என்கிறோம். இதனால் பல விஷயங்களை அறிய முடியவில்லை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அனுபவங்கள் பல விஷயங்களில் நம்மை வழிநடத்துகிறது இந்த மாதிரியான குழப்பமான நேரங்களில் மன்னிக்க மாட்டோம் சில விஷயங்களை மறக்க மாட்டோம் அதிகப்படியான கோபங்கள் அதிகப்படியாக பெரிதுபடுத்துவது அல்லது பெரிய விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது. கணவன் குடித்துவிட்டு குழந்தைகளை அடிக்கும்போது அதை பெரிதுபடுத்தாமல் கணவனுக்கு பயந்து அது ஒரு சிறிய விஷயமாக மாற்றுவது. இதுபோன்ற பீதி இருக்கக்கூடிய நேரங்களில் கோபம் இருக்கும் நேரத்தில் அந்த விஷயத்தை சரியான விகிதத்தில் பார்வை பார்ப்பது என்பது இயலாத விஷயம் இதனால் தான் பெரியவர்கள் அன்றைய காலத்தில் கூடவே இருந்து குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரியான விகிதத்தில் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தனர். தேவையான ஆலோசனையும் வழங்கினார் எந்த ஒரு பலவானாக இருந்தாலும் தூக்கத்தில் அடித்தாள் எதுவுமே செய்ய முடியாது அவர்களுடைய திறமை வெளியே வந்து விடாதே நாம் சோர்வடைந்த நிலையிலோ  நம் உணர்வு இழந்த நிலையில் சில நேரங்களில் சில விஷயம் தவறுதலாக பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதையெல்லாம் புரிந்து பழக வேண்டும் இலக்கு ஆகக்கூடிய நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

 சேலை கட்டிய பெண்கள்தான் பத்தினி என்றால் அது ஒரு நம்பிக்கை அதற்காக ஒரு பெண் நவீன ஆடை அணிந்து  வந்தாள் அவர்களை தவறாக கூற முடியாது. இதுபோன்ற அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொள்வது இது என்னுடைய நம்பிக்கைதான் இது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது உண்மையாக இருக்க வேண்டும் என இருக்கக் கூடாது  இது போல  நினைக்கும்போதே மற்றவர்கள் கூறுவதை நாம் கவனிப்போம்.

    
குடும்பம் பள்ளி நாடு அரசியல் சமூகம் எல்லா இடத்திலும் அவர் அவர்கள் கூறுவது தான் சரி என தீர்மானத்தோடு பேசுகிறார்கள். இது ஒரு கருத்து தீவிரவாதமாகும் இதற்கு உளவியல் காரணங்கள் என்ன ஏன் மற்றவர்களை தீர்மானமாக பழிபோட்டு பேசுகிறோம்.  ஏதோ ஓர் இடத்தில் நான் பழிவாங்கப்பட்டு இருப்போம், நாம் ஏமாற்றப்பட்டு இருப்போம், அல்லது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான  நியாயங்கள் கூட  கிடைக்காமல் துரோக படுத்தப்பட்டிருந்த நமக்கு துரோகம் நடந்தது. அநீதி நடந்தது என்கிற போது அதை எதிர்க்க முடியாத நிலையில் நாம் இருந்திருப்போம். நம் கருத்தை கூற முடியாத அல்லது கூறினாலும் தண்டிக்கப்படக் கூடிய இடத்தில் இருப்போம் அப்போது தானாகவே மற்றவர்கள் மீது பழி போட்டு பேசுவது நம் சுபாவத்தில் சாதாரணமாக வந்துவிடும். இதுதான் உளவியல் ஆய்வில் கண்டறிந்த விஷயங்கள் ஒரு சிலர் எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் மற்றவர் மீது பழி போட்டு பேசுவார்கள்  என்ன விதமான தீங்கு நடந்திருந்தாலும் குடும்பம் மற்றும் சமுதாயம் என எதுவாக இருந்தாலும் எனக்கு என்ன நிகழ்கிறதோ அதற்கு நானே முழுப்பொறுப்பு என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் பெண்கள் இன்று பல நேரங்களில் தன்னுடைய உரிமை பாதிக்கப்படுவதாகவும் தன்னை யாரோ பழி வாங்குவதாகவும் தனக்கு துரோகம் நடப்பதாகவும் பெரிதளவில் பீதி அடைகின்றனர் இதனால் பல விஷயங்களில் குழப்பம் அடைகின்றனர் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment