இன்றைய சமுதாயத்தில் கடந்த 19ம் நூற்றாண்டில் இல்லாத பெரும் அதிசயம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இன்று பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ள தற்கொலை கலாச்சாரம் பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. எழுத்து என்பது சமூகத்தில் காணப்படும் சிலர்களை மட்டும் அலசி ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவது இல்லை. படிக்காத ஏழை எளிய பாமர மக்களும் பயன்படும் வகையில் அமைந்தால்தான் மக்கள் சமூகத்திற்கு அது பெரிதும் பயனளிப்பதாக அமையும். நம்மை சுற்றியுள்ள மக்கள் படும் இன்னல்களை எடுத்து ஆராய்ந்து அதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் இந்த பதிவை பதிவு செய்கிறோம்.
இன்றைய மக்களை பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனை தற்கொலை பிரச்சினைகள்தான். இந்த உலகம் போட்டி உலகம் படிப்பில் வேலைப்பாடுகளில் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இத்துடன் இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினையாக தோன்றுகிறது காதல், காதல் என்பது படிப்பில் தோல்வி அடைந்தாலும் அல்லது படித்து முடித்த பின்பும் நீண்ட நாள் வேலை கிடைக்காது போய்விட்டால் வாலிப பருவத்தில்தான் ஆண் பெண் இருபாலரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் அல்லது ஒருதலைக் காதல் வெற்றி பெறாது போய்விட்டால் உடனே இதற்குத் தீர்வு தற்கொலை தான் முடிவு என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். இதற்கு காரணம் தன்னம்பிக்கை இல்லாத போதும் உடன் இருப்போர் எள்ளி நகையாடல் பெற்றோர் இளைஞர்களின் மனதை புரிந்து கொள்ளவும் அவர்கள் காதலுக்கு குறுக்கே நின்றால், போன்றவைகளை இளைஞர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. என்பது இளைஞர்களின் மனநிலை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய கடமை உடனிருப்பவர்களே உண்டு என்பதை உடனிருப்போர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமாகி கணவனை விட்டு வேறொருவரை ஊர் அறியாமல் விரும்பி பின்னர் ஊர் அறிந்த பின் தற்கொலை செய்யும் பழக்கத்தை கண்டிக்கிறது. இன்றைய சமூகத்தில் பல ஆடவரை விரும்பும் பெண்களும் பெருகி வருகின்றன. இதையே பொந்ருதாக் காமம் என்றார் தொல்காப்பியர் ஆணும் பெண்ணும் மனக்கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதை இளைஞர் மத்தியில் தெளிவாக கூறி அவர்கள் மனதில் உறுதிப்படுத்த வேண்டும்.
நம் நாட்டின் பிரச்சினையும் பல உண்டு அவைகளின் தற்கொலை முக்கியமான ஒன்று இன்றைய சூழலில் பலவிதமான காரணங்களினால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த மதிப்பெண் பெற மாட்டோம், போராட்டம், காதலில் தோல்வி, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ,புகுந்த வீட்டில் கொடுமைகள், பணி செய்யும் இடத்தில் பிரச்சனைகளை, கடன் தொல்லை, இன்னும் பல பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை நிகழ்கிறது. பெரும்பாலான தற்கொலைகள் பல நாட்கள் சிந்தித்து திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஆகவே தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்கள் உடன் இருப்போர்க்கு அதை தெரியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்தால் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்கலாம். தேவையான ஆதரவும், அறிவுரையும், வழிகாட்டுதலும், பொதுவாக தற்கொலையை தவிர்க்க உதவும்.

No comments:
Post a Comment