Wednesday, August 29, 2018

குழப்பமான நேரத்தில் எந்த முடிவையும் எடுக்காதிங்க

குழப்பங்களால் வரக்கூடிய பிரச்சினைகள் என்ன அந்த நிலையை எப்படி புரிந்து கொள்வது அதிலிருந்து எப்படி வெளிவருவது. வரலாறு, வாழ்வியல், சமூக அமைப்பு போன்ற வரலாறுகளை படிக்கும்போது ஒவ்வொன்றுமே சுவாரசியமாக இருக்கும் பல விஷயங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கும் எந்த ஒரு காலகட்டத்திலும் நம்மை சுற்றி பல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

  சமூகம் சில விதிகளை வைத்திருக்கும், சட்டமும் சில விதிகளை வைத்திருக்கும். இது நாட்டுக்கு நாடு, தலைமுறைக்கு தலைமுறை மாறிக்கொண்டே இருக்கும். சிக்கலே இல்லாமல் நார்மலாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனையே இருக்காது. தெளிந்த நீரோடை போல சென்றுகொண்டிருக்கும். யாருமே  சவாலை விரும்புவதில்லை எனக்கு இந்த சேலஞ்சை வேண்டும் என்றும் இருந்ததில்லை அப்படி நினைக்காத போதும் சிலருக்கு இது போன்ற சவால் நிறைந்த வாழ்க்கை அமைந்து விடுகிறது. இந்த மாதிரியான கட்டளைகளை  தாண்டும்போதே இந்த விதிகளை எப்படி கடைபிடிக்க முடியும்.
credit to dinamalar.com



 இந்த விதிகளை மீற வேண்டுமா வேண்டாமா என ஆய்வு செய்யாமல்  குழம்பிக் கொண்டே இருக்கின்றோம். இதனால் மேலும் மேலும் குழப்பம் ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்தால்   அது மட்டுமே இறுதியாக இருந்தது. அதன்பிறகு மறுமணம் என்பதே கிடையாது விவாகரத்து விதவை திருமணம் நடைமுறையில் இல்லாதா கால கட்டமாக  இருந்தது. இது பெரிய அளவில் பெண்களின் நடுவே ஒரு கொடுமையான விதிமுறைகளாக இருந்தது பெண்கள் பிறரை சார்ந்தே இருந்தனர். சிறு வயதிலேயே திருமணம் முடித்தனர் பதினைந்து வயதில் விதவை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அதன் பிறகு அவர்களது வாழ்க்கை மற்றவரை சார்ந்து இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு தனது பெற்றோரையோ அல்லது உடன்பிறந்த சகோதரனையோ நம்பி இருக்கக்கூடிய சூழல் இருந்தது. சகோதரனும் திருமணமாகி மனைவியுடன் வீட்டுக்கு வரும்பொழுது இரண்டு பெண்களுக்கு நடுவே போட்டி ஏற்படுகிறது வீட்டில் பிறந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படுகின்ற  நீ பெரியவனா நான் பெரியவனா என்ற சர்ச்சை மகனை வைத்து மாமியார்-மருமகளுக்கும் இடையே போட்டி பெண்களே பெண்களுக்கு எதிராக உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பின்மை சார்ந்திருத்தல் தன் பிள்ளை இடத்தில் இருந்து வரக்கூடிய அன்பு அல்லது பொருள் மனைவி வருவதன் மூலம் தன்னிடம் வராமல் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே எனக்கு தான் முன்னுரிமை வேண்டும் எனவே இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை வளர்ந்துவரும்  நிலையில் அந்த வீட்டுக்கு விதவை கோலத்தில் இன்னொரு பெண் உள்ளே வரும்போது ஏற்படுகின்ற சிக்கல் அதிகமாகவே இருக்கும்.

அன்றைய காலத்தில் இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே விதவைப் பெண்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அதனைப் என்னுடைய ஆளுமை குறைப்பதற்காகவும் வாழ வந்த பெண்ணிற்கு சிக்கலில்லாமல் இருப்பதற்காகவும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தினர். பல மூடநம்பிக்கைகள் வந்ததற்கு காரணம் அன்றைய காலகட்டத்தில்  அதற்கான ஒரு நியாயம் இருந்தது அந்த காலகட்டத்தை கடந்து உடனே அதை அபத்தமாக நினைக்கின்றோம். இன்று ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக   18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்தால் அந்தத் திருமணம் செல்லாது என்று சட்டம் உள்ளது. அந்த பெண்ணுக்காக ஒரு சமூக அமைப்பு பேசக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிற பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நம்முடைய நன்மைக்காக சமூக விதியும் சட்டமும் என்னென்ன கொடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காலகட்டத்திலும் சமூக விதிகளும் சட்டங்களும் பலவற்றையும் உள்வாங்கி தான் உருவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கைகள் விதிகள் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு தருவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 அதை மனிதர்கள் மீறும்போது அந்த விதிகள் தளர்த்தப்படுகிறது  பெண்கள் மறுமணம் புரியலாம் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்லலாம் போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதை சில பெண்கள்  தவறுதலாகமீறும்போது  பல குடும்ப அமைப்புகள் சீரழிகின்றது குழப்பங்கள் எப்படி உருவாகிறது என்பதைக் குறித்து விவாதித்துள்ளோம். பிரச்சினை இல்லாத நேரத்தில் மனரீதியான சிக்கலையோ சண்டையோ ஏற்படும்போது அதைப் பொருட்படுத்தாமல் மன்னித்து விடுவோம். அது போலத்தான் பல குடும்பங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது பாதுகாப்பு இல்லாத பொருளாதார உதவிகளை பாலியல் உறவும் திருப்தி இல்லாத நிலையில் அந்த கணவன் சிறு பிரச்சினை செய்தாலும் அது பெரும் பிரச்சினையாகவே தெரிகிறது. அதே போல அந்த ஆணுக்கும் அதன்பின் எந்தவிதமான ஆறுதல் கடமை உணர்வும் பொறுப்புணர்வும் இல்லாமல் அந்த ஆண்னிடம் என்னுடைய எதிர்பார்ப்பு குறையும் போது அந்தப் பெண் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிதாக பூதாகரமாக பார்ப்பார்.

பார்வைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பது அந்த தனிப்பட்ட மனிதனின் மனவளமையை பொறுத்தே உள்ளது. ஒரு ஆரோக்கியமான நிலையில் உள்ளவர் எளிதாக மன்னித்து விடுவார் அது எல்லோராலும் முடியாது. ஏற்கனவே ஒரு கோபத்தில் அல்லது  வெறுப்பில் உள்ள போது நம்முடைய பார்வையே திரிக்கப்பட்டு நாம் பார்க்கும் விதமே வேறு விதமாக செல்கிறது. மேலும் பலவிதமான குழப்பங்கள் வருகிறது அந்த குழப்பங்களுக்கு தீர்ந்த ஆலோசனை பெறாமல் மேற்கொண்டு மேற்கொண்டு சில விஷயங்களை செய்யும் போது அது பெரிய செயலாக மாறுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது தனிப்பட்ட ஆணும் பெண்ணும் பாதித்தால் எந்த இடத்திலையும் சிக்கல் ஏற்படாது. ஆனால் குழந்தையும் அவர்கள் சார்ந்த குடும்ப அமைப்பும் பாதிப்பு ஏற்படும்போது மிகப்பெரிய வலியை குடும்பத்திற்கு மட்டும்மல்லாது இந்த சமூகத்திற்கும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் இருப்பதே முக்கியமான குடும்ப வாழ்வில் உள்ள பல பிரச்சனைகளை தடுக்கும்.

No comments:

Post a Comment