குழப்பமான நேரத்தை எப்படி கடந்து செல்வது அப்படி கடந்து வர முடியாத நேரங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு என்னவிதமான தாக்கங்கள் ஏற்படுகிறது என்பதைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். குழப்பம் என்பது ஒரு இழப்பையோ அல்லது எதிர்பார்ப்பு நடக்காத சமயங்கள் வரக்கூடிய நிலை. இந்த மாதிரியான நேரங்களில் பொதுவாக செய்வது ஏதாவது செய்து அந்த இழப்பை ஈடு செய்து விட முடியுமா அந்த இழந்தது திருப்பி கிடைத்துவிடுமா என்று யோசித்துக் கொண்டிருப்போம்.
உதாரணத்திற்கு கணவன்-மனைவி இடையே ஒரு பிரச்சினை என்றால் எப்பொழுது பார்த்தாலும் ஒரு சோகமான சூழலிலேயே பணி செய்து கொண்டிருப்பார்கள் அதை பார்த்த சக ஊழியர் ஏன் இப்படி உள்ளீர்கள் டீ காபி சாப்பிடலாம் என்று கூப்பிடுவார்கள். பிறகு இவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசி இவர்கள் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சினை இருக்கக் கூடிய சூழலில் இவர்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதை விடுத்து இருவரும் தனித்தனியே மனநல ஆலோசனை மேற்கொண்டிருந்தால் இருவருடைய குடும்ப பிரச்சினையும் தீர்ந்துவிடும்.
அதை விடுத்து இவர்கள் செய்யும் இந்த செயல் இவர்களை மட்டுமல்லாது அவர்களது இரு குடும்பத்தையும் பாதித்து விடுகிறது. இருவரும் பேசுவதால் மன நிம்மதி கிடைக்கிறது. திரைப்படத்துக்கும் வெளியில் செல்வதால் சிறுசிறு சந்தோஷம் மட்டுமே கிடைக்கிறது அந்த மகிழ்ச்சியால் தன்னுடைய பிரச்சினைகள் தீர்ந்து நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்கும் என தவறான முடிவை எடுக்கின்றனர். எதையுமே எதிர்கொள்வதற்கு ஒரு முறை உள்ளது. விளம்பரப்படுத்தப்படும் எந்த பொருளையுமே சற்று தள்ளி வைத்து தான் பார்க்க வேண்டும் இதை மட்டும் செய்தால் எல்லா விதமான பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று ஒரு விளம்பரம் செய்கின்றனர்.
இந்த மாதிரியான நிகழ்வுகள் கேட்டவுடனே உடனே முடிவு கிடைக்க வேண்டும் என போகும்போது எளிதாக அவர்களுக்கு இலக்காகிவிடுகிறோம். அவர்களுக்கு விற்பனை மட்டுமே ஆகுமே ஒழிய நமக்கு எந்தவித சிக்கலையும் குழப்பத்தையும் தீர்க்காது. உடனடி தீர்வு என்பது பொய் தயவுசெய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காலம், பொறுமை, சகிப்புத்தன்மை இந்த மூன்று மட்டுமே எந்த ஒரு குழப்பத்தில் இருந்தும் உங்களை வெளியே கொண்டுவர முடியும் அது நோயாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சினை ஆனாலும் சரி வேறு எந்த விதமான குழப்பமாக இருந்தாலும் சரி காலம் என்பது உள்ளது. அதற்கு பொறுமையாக நாம் இருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை மிக அவசியமாக உள்ளது இதை யெல்லாம் முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment