ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதில் கிடைக்கக்கூடிய வருவாயை தனக்கும் தனது குடும்பத்திற்கும் செலவு செய்தது போக மீதி தொகையை சிக்கனமாக வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 70 விழுக்காடு மக்கள் வங்கிகளில் தங்கள் சேமிப்பில் வைத்துள்ளனர். பெரும் சிரமப்பட்டு தொழிலில் வரும் ஒவ்வொரு வருமானத்திலும் சேமித்து வங்கிகளின் வைக்கின்றனர்.
ஆனால் தற்சமயம் வங்கிகளில் சேமித்து வைக்கும் தொகையானது ஒரு சில கொள்ளை கும்பல்களால் எளிதாக கொள்ளையடிக்கப்படுகிறது. அவர்கள் வங்கிகளில் நேரடியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கிடையாது அதற்கு மாறாக நம்முடைய அறியாமையை வைத்து நமது வங்கிக் கணக்கு கொள்ளையடிக்கின்றனர். இதற்கு நாம் தான் முழுப் பொறுப்பு மிகவும் அஜாக்கிரதையாக வங்கிகளின் விபரங்களை மற்ற நபர்களுக்கு தரும்போது அவர்கள் அதை பயன்படுத்தி எளிய முறையில் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதன் பிறகு சேமித்த தொகை அனைத்தையும் இழந்து விட்டு வங்கிகளின் உதவியையும் காவல்துறையின் உதவியையும் நாடிச் செல்கின்றோம். இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்த பிறகு கொள்ளையடித்த பணத்தில் மீட்டெடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க வங்கி கணக்கை எப்படி பராமரிக்க வேண்டும் ஏடிஎம் கார்டு, ஏடிஎம் இயந்திரம், போன்றவற்றில் பணம் எடுக்கும் போதும், பணத்தை போடும் போதும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் மூன்றாம் நபரிடம் நம்முடைய ஏடிஎம் கார்டின் பின் நம்பரை சொல்வதன் மூலமாகவே நிகழ்கிறது. எனவே எந்தக் காரணம் கொண்டும் தெரியாது மற்றும் மூன்றாம் நபரிடம் ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பகிர்ந்துகொள்ள வேண்டாம். இந்த நம்பரை வங்கியில் வேலை செய்யும் அலுவலர்கள் கேட்டால் கூட கொடுக்க கூடாது. இதன் மூலமே பெரும்பாலும் கொள்ளைகள் நடைபெறுகிறது. பெரும்பாலான கணவன்மார்கள் தன்னுடைய மனைவியின் ஏடிஎம் கார்டு நம்பரை இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவருடைய கார்டு நம்பர் அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கணவன் பயன்படுத்தும்போது இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் கூட அதில் உள்ள பணத்தை மீட்டு எடுக்க முடியாது.
குறைந்தது அறுபது நாட்களுக்கு ஒருமுறையாவது ஏடிஎம் கார்டின் பின் நம்பரை மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிக் கொண்ட நம்பரை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இதை வங்கிகள் அறிவுறுத்துகின்றனர். ஏடிஎம் கார்டின் பின் நம்பரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஏடிஎம் கார்டின் பின்புறத்தில் எழுதி வைக்கக் கூடாது. இதனால் உங்களது கார்டு தொலைந்து விட்டால் கூட மற்றவர்களால் எளிதில் பணத்தை எடுக்க முடியாது மூன்று முறைக்கு மேல் தவறான எண்களை டைப் செய்தாள் தானாகவே ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் உங்கள் வங்கியில் உள்ள பணம் பாதுகாக்கப்படுகிறது.
ஒரு சிலர் தொடர்ந்து அதிகளவில் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர் குறைந்தது மாதத்திற்கு 3 லிருந்து 5 முறை மட்டுமே பயன்படுத்துங்கள் இதனால் உங்கள் வங்கியில் பரிவர்த்தனைகளும் உங்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் குறையும். தொடர்ந்து அடிக்கடி ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் போது எளிமையாக உங்களை பின்தொடர்ந்து உங்கள் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முடியும். எனவே தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதில் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்துகின்றனர். ஒவ்வொரு முறை ஏடிஎம் இயந்திரத்திற்கு செல்லும் போதும் உங்களது இருப்புத் தொகையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒவ்வொருவரும் அவசியம் செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை இருப்பு தொகைகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நேரடியாக வங்கியின் உதவியை அல்லது வங்கியின் இலவச தொலைபேசி எண்ணை மட்டுமே அழைத்து அவரிடம் ஆலோசனை பெற வேண்டும் வேறு எவரின் உதவியும் நாடக் கூடாது. ஒருவேளை மற்றவரின் உதவியை நாடினால் உங்களுக்கு உதவி செய்வது போல உங்களது வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள்.
கார்டு தொலைந்துவிட்டால் காலதாமதமின்றி உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விடுங்கள். இதன் மூலமாக கார்டில் ஏற்படும் பண பரிவர்த்தனைகள் தடுக்கப்படும். ஒருவேளை கார்டு கிடைத்து விட்டால் கூட உங்கள் கார்டை மீட்டேடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை ஏடிஎம் நுழைந்தவுடன் உங்களை சுற்றி உள்ள சூழ்நிலையில் கவனிக்க வேண்டும். ஒருவேளை தொடர்ந்து ஒரு குழுவோ ஒரு நபர் உங்களை பின்தொடர்ந்தாள் அவரைப் பற்றிய தகவல்களை வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். ஏடிஎம் நுழைந்த உடனே நீங்கள் மட்டுமே உள்ளதை உறுதி செய்தபிறகு மட்டுமே உங்களது பின் நம்பரை பயன்படுத்த வேண்டும். கார்டு பொருத்தப்படும் இடத்தில் ஏதேனும் மெல்லிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும் சோதித்து கொள்ளுங்கள்.
பயன்படுத்திய பிறகு ஏடிஎம் கார்டை அதற்குண்டான சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏடிஎம் கார்டை கண்ட இடங்களில் போட்டு வைக்கக்கூடாது இதனால் எளிதாக தொலைந்து போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கார்டை யாரிடமும் கொடுத்து பணத்தை எடுத்து வர சொல்லக்கூடாது. மேலும் முதன் முறையாக கார்டின் பின் நம்பரை பதிவு செய்யும்போது வெளியாட்களின் உதவியை நாடக்கூடாது. பின் நம்பரை மாற்ற வேண்டுமென வங்கிகளில் கூறினால் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. வங்கி கூறியவுடன் பின் நம்பரை மாற்றி அதன் பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு வங்கியே முழு பொறுப்பேற்று உங்களது பணத்தை பாதுகாப்பாக திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. வங்கி கூறிய பிறகு பின் நம்பரை மாற்றாமல் அலட்சியமாக இருந்தால் அதன்பிறகு ஏற்படும் அசம்பவிதத்திற்கு வங்கி எந்தவகையிலும் பொறுப்பேற்காது. எனவே வங்கி அறிவுறுத்தலின்படி ஏடிஎம் கார்டை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற செயல் முறைகளை தொடர்ந்து பின்பற்றினாலே ஏமாற்றுபவர்களிடம் இருந்து உங்கள் வங்கி பணத்தை பாதுகாப்பாக வைக்க முடியும். இதை தாங்கள் மட்டுமே பயன்படுத்தாமல் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் கற்றுக்கொடுங்கள் பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் வயதான பெண்களின் கணக்கிலிருந்தே பணங்கள் எடுக்கப்படுகிறது. எனவே உங்களது தாய்மார்களுக்கு இது பற்றிய புரிதலை ஏற்படுத்துங்கள். அவர்கள் பணம் எடுக்க செல்லும்போது நீங்களும் அவருடன் சென்று இதுபற்றிய விபரங்களை விளக்கிச் சொல்லுங்கள். அதன் மூலம் அவரும் தெளிவு பெறுவார்.
No comments:
Post a Comment