தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல், வாகனம் ஓட்டிச் செல்லும்போது வாகனம் சம்பந்தப்பட்ட அணைத்து ஆவணங்களையும், ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும். இதை வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளிடம் கண்பிக்க வேண்டும். தொடர்ந்து வாகனம் ஓட்டிச் செல்லும்போது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் சார்ந்த ஒரிஜினல் ஆவணங்களை கையில் வைத்திருக்கும் போது அதை எளிதாக தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தால் தினசரி பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை தொலைத்துவிட்டு அதற்காக காவல்துறை நாடுகின்றனர். இது பெருமளவில் மன உளைச்சலையும் தேவையற்ற அலைக்கழிப்பும் ஏற்படுத்துகிறது. முன்பு வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிம நகலை வைத்திருந்தால் போதுமானது. ஆனால் தற்போது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கட்டாயப்படுத்துகின்றனர். இதுனால் வெளியே செல்பவர்கள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை எளிதாக தொலைத்து விடும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரிஜினல் ஆவணங்களையும் ஒரிஜினல் லைசன்ஸ் உங்கள் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது ஆனால் அவை அனைத்துமே நம் கையில் வைத்திருக்கும் மொபைல் போனில் வைத்துக் கொள்ளலாம் இதற்காக ஒரு மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் M parivahan என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருளின் உதவியோடு ஓட்டுனர் உரிமத்தையும் வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் நமது மொபைல் போனிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ள முடியும். சோதனையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியிடம் இதை காண்பித்தால் போதுமானது என காவல்துறை டிஜிபி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். M parivahan என்ற மென்பொருளானது தற்போது பிளே ஸ்டோர்ரில் கிடைக்கிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்களது மொபைல் எண்ணை என்டர் செய்து கடவு எண்ணை பெற்றுக்கொண்டு உள்ளே நுழையவும். முதற்கட்டமாக அதில் கேட்கப்படும் சிறுசிறு கேள்விகளுக்கு பதிலளித்த உடனே இந்த மென்பொருளின் அடிப்படை கட்டமைப்பு உறுதி செய்தவுடன் இந்த மென்பொருளுக்குள் சென்று விடலாம்.
மேலே உள்ள பகுதியில் உங்கள் வாகனத்தின் நம்பர் டைப் செய்து கொள்ளுங்கள் டைப் செய்தவுடன் உங்கள் வாகனம் வாங்கும் போது ஆர் டி ஒ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் இங்கு காட்டப்படும். வாகனத்தின் உரிமையாளர் பெயர், வாகனத்தின் மாடல், வாகனம் வாங்கும் போது கொடுக்கப்பட்ட முகவரி, வாகனத்தில் எண், அது பதிவு செய்யப்பட்ட மாவட்டம், பதிவு செய்த அலுவலகம், வாகனம் வாங்கப்பட்ட முகவர் என அனைத்து விபரங்களுக்கு காட்டப்படும். இது அனைத்துமே ஒரிஜினல் வாகன சான்றிதழ்களில் காட்டப்பட்டுள்ளது போல மிக சரியாக அதே வடிவத்தில் காட்டப்படும். இது அப்படியே முழுமையாக பதிவிறக்கம் செய்துகொண்டு உங்களது மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இப்போது நமக்கு தேவையானது வாகனத்தின் ஒரிஜினல் சான்றிதழ் கிடைத்துவிட்டது அதை டிஜிட்டலாகவும் மாற்றி விட்டோம். இனி அடுத்ததாக ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
வாகனத்தின் எண் பதிவு செய்யப்பட்டது போல டிரைவிங் லைசன்ஸில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணையும் சரியாக பார்த்து டைப் செய்யவும். டைப் செய்யப்பட்ட சிறுது நேரத்தில் உங்களது பெயர், உங்களது வயது, டிரைவிங் லைசென்ஸ் பெறப்பட்டது, டிரைவிங் லைசென்ஸ் உள்ள ஆர்டிஓ அலுவலகம், உங்களது முழு முகவரி என ஒரிஜினல் லைசன்ஸ் உள்ள அனைத்து தகவல்களுமே மிகச் சரியாக காட்டப்படும். இவற்றில் உள்ள விவரங்களை சரிபார்த்து பிறகு இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தற்போது ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் டிஜிட்டலாக மாற்றி விட்டோம். பதிவு செய்யப்பட்ட இரண்டு ஆவணங்களையும் மொபைல் போனில் உங்களது தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் பதிவு செய்த இந்த ஆவணங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களது நண்பர் உங்களது வாகனத்தை எடுத்துச் சென்று காவல்துறை அதிகாரியிடம் மாட்டிக்கொண்டால் உடனடியாக இந்த சான்றுகளை அவர்களுக்கு அனுப்பி அவருக்கு உதவி செய்ய முடியும். மொபைல் போன் தவிர கணினிகளிலும் ஜிமெயிலில் அனுப்பிய இதை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை காவல்துறையின் வாகனச் சோதனையில் நீங்கள் பிடிபட்டால் அவரிடம் ஒரிஜினல் ஆவணங்கள் காட்டுவதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்த ஆவணத்தை மொபைலில் இருந்து கட்டலாம். இது அணைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் என டி ஜி பி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். எனவே வேலை டென்சன்களில் ஆவணங்களை எடுத்து வைக்கவில்லை என கவலை படவேண்டாம்.
இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையாக உங்களது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்துங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து பயன்படுத்த சொல்லுங்கள். இதன் மூலம் உங்களது பொன்னான நேரமும், மன உளைசலும், தேவையற்ற செலவுகளும் மிச்சமாகும்.
No comments:
Post a Comment