Tuesday, August 28, 2018

ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதை மீட்டு எடுப்பது எப்படி

தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான மக்கள் ஸ்மார்ட் ரேஷன்  
கார்டை  பயன்படுத்தி வருகின்றனர். இது பழைய ரேஷன் கார்டை விட இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுவந்துள்ளனர். இங்கு பதிவு செய்யப்படும் அனைத்தும்  கணினியில் பதிவு செய்யப்படுவதால் முறையான கணக்கை பராமரிக்க முடியும் என்பதற்காகவும் மேலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்யவும்  அதனுடைய இருப்பு  மற்றும் தேவையை  சரியாக  துல்லியமாக கணிக்க முடியும் என்பதற்காகவும்  இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய ரேஷன் கார்டு புத்தக வடிவத்தில் இருப்பதால் அவை தொலைந்து போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன்  அட்டையானது மிகவும் சிறிய ஏடிஎம் கார்டை  போல இருப்பதால் பெரும்பாலான மக்கள் அவற்றை பாக்கெட்டிலும் பரிசுகளையும் வைத்துக் கொள்கின்றனர். இதனால் இது தொலைந்து போகும் வாய்ப்பு மிக  அதிகமாக உள்ளது வங்கி ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அவற்றை வங்கியின் உதவியுடன்  எளிய முறையில்  திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.  ஆனால் ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அதை எளிய முறையில் எப்படி மீட்டு எடுப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை உணவு பண்டங்கள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல்  அரசு சார்ந்த எந்த உதவிகள்   வேண்டுமானாலும் அதற்கு குடும்ப அட்டை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டை தொலைந்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது  என்பதை  இந்த பகுதியில் பார்க்கலாம்.






தற்போது தமிழக அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு 80% ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது பெரும்பாலான மக்கள் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிமையானது இது தொலைந்துவிடாமல் பத்திரமாக பாதுகாப்பது என்பது மிகவும் கடினம். மற்ற வேலைகளை  விடுத்து எந்த நேரமும் இதிலே கவனம் செலுத்த முடியாது. எனவே அனைத்து பயனாளர்களும் புதிய ரேஷன் கார்டு வாங்கிய உடனேயே அவற்றை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் கூட நான் ஏற்கனவே பதிவு செய்த கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கும் அரசு சார்ந்த உதவிகள் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுவரை ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் பதிவிறக்கம் செய்யாதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.


புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டை வாங்கிய உடன் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். இது  தமிழக அரசின் உணவுப் பொருள்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் நேரடி அதிகாரப்பூர்வமான இணையதளம். இந்த  இணையதளத்திற்கு சென்றவுடன் வலது புறத்தில் இருக்கக்கூடிய பயனாளர் நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்யவும். பதிவு செய்யப்பட்ட பயனாளர் என்ற   பிரிவிற்கு  கீழே ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும். அதன் பிறகு கடவுச்சொல்லை  அனுப்புக  என்ற  பட்டனை க்ளிக் செய்யவும். பதிவு செய்யப்பட்ட  தொலைபேசி எண்ணுக்கு இந்த இணையதளத்தில் இருந்து ஒரு கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை பார்த்து இங்கே பதிவு செய்யவும் பதிவு செய்யப்பட்டவுடன் இவை நேரடியாக உங்களது கணக்கில் சென்று விடும். அங்கே உங்களது பெயர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்ப அட்டையில் என் உங்கள் வீட்டு முகவரி என அனைத்துமே காட்டப்படும். இவை அனைத்துமே சரியாக உள்ளதா எனப் பார்த்து இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை தவறாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறி மீண்டும் தொலைபேசி எண்ணுக்கு புதிய கடவுச்சொல்லை பெற்று மீண்டும் உள்ளிடவும்.

உங்கள்   கணக்கிக்கு  சென்றவுடனே உங்களது விபரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள   விவரங்கள்  அனைத்துமே  எளிதாக உங்களால் மாற்றிக்கொள்ள முடியும். தங்களது தேவைக்கு ஏற்ப இதை பயன்படுத்திக்  கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள  ஸ்மார்ட்  ரேஷன் கார்டு   அச்சு  என்ற பட்டனை  கிளிக் செய்யவும் க்ளிக் செய்தவுடன் கீழ்ப்பகுதியில் ஸ்மார்ட்  ரேஷன் கார்டு   அச்சு  என்ற பட்டன்   ஒன்று இருக்கும்  அதற்கு கீழே மொழியை தேர்ந்தெடுக்கவும் என்ற பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இடம்பெற்றுள்ளது. அதில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு அச்சு நகல் பதிவிறக்கம் என்று நீல நிற பட்டனை கிளிக் செய்யவும். ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் பதிவிறக்கி வைத்து கொள்ளுங்கள்.


 இது நாம்  தற்போது வைத்துள்ள ஸ்மார்ட் ரேஷன்  அட்டை போலவே இருக்கும் அதை  பாதுகாப்பாக உங்களது மொபைல்  போன்களிலும் அல்லது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கார்டில்  உங்களது பெயர்  கார்டு எண்  மற்றும் உங்களது முகவரி மற்றும் கடை எண் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.   பின் பகுதியில் டிஜிட்டல் ஸ்கேனர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த எண்னை வைத்து பொருட்கள் வாங்குவதற்கும் அரசு சார்ந்த உதவிகள் பெறுவதற்கும் ஸ்கேன் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  புதிதாக வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்  ரேஷன் கார்டு  தொலைந்துவிட்டால்  எளிதாக பதிவிறக்கம் செய்த  நகலை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும்  இந்த நகலில்  உள்ள என்னை   வைத்து  இ-சேவை மையத்தில் 30 ரூபாய் கொடுத்து  புதிய பிளாஸ்டிக் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதனால் எப்பொழுதுமே தங்கள் கைவசம் ஒரு கார்டு இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை அதை நகலெடுக்காமல்  விடும் பட்சத்தில்  மீண்டும் ஒரு புதிய கார்டு  பெறுவது மிகவும் சிக்கலான காரியம் மட்டுமல்லாமல் உங்களது நேரத்தையும் உங்களது பணத்தையும்  கரைக்கக்கூடும்.  எனவே இது போன்ற எளிய முறையை பயன்படுத்தி  உங்கள் கார்டை   மீட்டெடுத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment