தேர்வில் தோல்வி எதிர்பார்த்த அளவு மதிப்பெண் பெறவில்லை
தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம் இது பெரும் மனவருத்தம் அளிக்கக்கூடும். வருத்தப்பட்டு அழுவதால்
என்ன பலன் அழுவதால் தேர்வில் வெற்றிபெற முடியுமா, எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியுமா, தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில்
போக முடியுமா,
முடியவே முடியாது ஆகவே
வருத்தப்படுவதாலும் அழுவதாலும் எந்த பயனும் இல்லை.
இளைஞர்களே வெற்றியும் தோல்வியும்
நிரந்தரமல்ல மாறி மாறி வரும் வெற்றி பெற்றவர்கள் யாரும் புத்திசாலி அல்ல
புத்திசாலிகள் யாவரும் வெற்றி காண்பதில்லை. வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன்
இக்காலத்தில் வாழ்வின் வெற்றிஅடைவான் என்பது சொல்வதற்கில்லை. பெரும்பாலான
புகழ்பெற்ற மருத்துவர்கள் பொறியாளர்கள் வழக்கறிஞர்கள் கல்லூரியின் முதல் மதிப்பெண்
பெற்றவர்கள் அல்ல. தேர்வில் வெற்றி ஓரளவுக்கு வாழ்க்கைக்கு உதவலாம்
ஆனால் அதுவே வாழ்க்கையின்
வெற்றியின் ஆகாது.
மருத்துவர்
சிவராமன் மட்டுமல்ல புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜன் பல்கலைக்கழக இடை
நிலை தேர்வு தேறவில்லை. அதற்காக
அவர் தனது கணித ஆராய்ச்சியை விட்டுவிடவில்லை. சென்னையில்
எழுத்தாளராக பணியாற்றினார் ஓய்வு நேரத்தில் கணித
ஆராய்ச்சியில் தொடர்ந்தார் அவர் உலகப் புகழ் பெற்றார். மறைமலையடிகள், ஈவேரா
பெரியார், விஸ்வநாதன் போன்ற பேரறிஞர்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை கூட
படிக்கவில்லை. இவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து பேரறிஞர் ஆகவில்லையா! காமராஜர்
பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை அவர் முதலமைச்சராக பணியாற்ற இல்லையா வெற்றி காணவில்லை.
இளைஞர்களே
தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காகவும் மனம்
நொந்து போக வேண்டியதில்லை. ஒரு
தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதற்காக மனம் தளர வேண்டியதில்லை. உங்கள் திறமை வேறு
துறையில் இருக்கலாம். அந்தத் துறையில் நீங்கள் பெரும் வெற்றியை பெறலாம். மனம்
வருந்தி அழுது கொண்டு இருந்திருந்தால் என்ன பலன் கிடைக்கிறது அல்லது
தந்தை சொல்கிறாரே இன்று ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தொடர்ந்திருந்தால்
இன்று எங்காவது ஓர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததற்காக அழுது கொண்டிராமல் விரக்தி அடையாமல்
தமது திறமை இதில் உள்ளது என்பதே உணர்ந்து அதை வளர்த்துக் கொண்டதால் உயர்ந்த
தேர்வில் தோல்வியுற்றார். இளைஞரே ஓவியர் அரங்கநாதனை போல் நீங்களும் உங்கள்
திறமையில் நம்பிக்கை வைத்து அதை வளர்த்துக் கொண்டு முன்னேறலாம். மருத்துவர் சுப்பாராவ் போலவும் கணிதமேதை ராமானுஜம்
போலவும் நீங்களும் முயன்றால் பெயரும் புகழும்
பெற முடியும்.
இன்று
உங்கள் நண்பர்கள் யாவரும் ஒரு துறையில் கல்வி கற்க விரும்புகிறார்கள் என்பதற்காக
நீங்களும் அதைக் கற்க வேண்டும் என்பது இல்லை. அந்த பட்ட வகுப்பில் இடம்
கிடைக்கவில்லை என்பதற்காக வருந்த வேண்டியதில்லை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
எல்லோரும் போகும் வழி சாதாரண வழி தலைவர்கள் தாணியாகத்தான் செல்வார்கள் சாதாரண
மக்கள் அவர்கள் பின்னால் செல்வார்கள் சராசரி மனிதனே
எல்லோரும் போகும் வழியில் போகும் மேலான திறமை உடையவர் தமக்கென்று ஒரு
வழியை தேர்ந்தெடுத்து கொள்வார். நீங்களும் மற்றவர்களுக்கு முன்னோடியாக முடியும்
நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.